27 11
உலகம்செய்திகள்

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

Share

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

இந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ரஷ்யா (Russia) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து (India) ஆயுதங்களை வாங்கிய கொள்வனவாளர்களே இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியதால், ரஷ்யா கடுமையாக கோபம் அடைந்துள்ளது.

அத்தோடு குறித்த விடயத்திற்கு ரஷ்யா, இந்தியாவிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள், வாங்கிய நாட்டுக்கே பயன்படுத்த அனுமதிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்த ரஷ்யாவின் அதிருப்தி பன்முறை வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அரசு இதற்கான அதிகாரபூர்வமான கருத்துகளை தெரிவிக்கவில்லை, ஆனால் அவற்றைப் பரிசீலிக்காமல் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு அனுப்பப்படும் குண்டுகள் பெரும்பாலும் இத்தாலிய நிறுவனங்களால் நிரப்பப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய ஆயுதங்கள் குறைவாகவே உள்ளன என்றும் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...