4 47
உலகம்செய்திகள்

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Share

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலின் போது ரஷ்யாவின் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கிய நிலையில் அண்மையில் உக்ரைனுக்கு வழங்கியது. இந்த விமானம் உண்மையில் அமெரிக்காவால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் திங்களன்று, ரஷ்யா நூறாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதன்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி கூறினார்.

கடந்த ஆண்டு, நேட்டோ படைகள் சுமார் 65 எஃப் -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தன.

எஃப்-16 ரக போர் விமானங்கள் தவிர, பேட்ரியாட் மற்றும் நாசா ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உக்ரைனிடம் உள்ளன. எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...