7 42
இலங்கைஉலகம்செய்திகள்

இறுதிக்கட்ட போரின் வலிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்: உமா குமரன்

Share

இறுதிக்கட்ட போரின் வலிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்: உமா குமரன்

வலிகள் நிறைந்த இறுதிக்கட்ட போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நீதி கிடைக்காத ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே உமா குமரன் (Uma Kumaran) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையை (srilanka) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதில் பிரித்தானியா (United Kingdom) முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.

எமது பிரதமர் கியஸ்டாமர் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான கெத்ரின் மிஸ்க் போன்ற அனைவருமே தற்போதைய அரசாங்கம் அமைவதற்கு முன்னராக இருந்து இலங்கை தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புக்காவும் போராடிய வண்ணமே உள்ளனர்.

மேலும் நல்லிணக்கத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court) அனுப்புவதில் பிரித்தானியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என நாம் ஆட்சிக்கு வரும் முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.

நடந்த அனைத்துக்கும் பொறுப்பானவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

இறுதிக்கட்ட போரின் போது, தமிழர்கள் இடத்தில் ஏற்பட்ட வலிகளும் துன்பங்களும் மேலும் பதிந்துள்ள நினைவுகளும் ஒருபோதும் எம்மைவிட்டு போய்விடாது.

இந்த வலிகளுக்கான நீதியை பெற்றுத்தருவதற்கான எந்தவொரு முயற்சியையும் இலங்கை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை.

எனவே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 8 3
செய்திகள்அரசியல்இலங்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க எதிர்க்கட்சி தயார்: சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு!

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கும் அரசாங்கம் முன்வருமானால் அதற்கு...

istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...