13 19
உலகம்செய்திகள்

விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி

Share

விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி

ஜேர்மனி(Germany) செல்வதற்கு ஆர்வமாக இருக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மன் விசா செயலாக்க நேரம் 9 மாதங்களிலிருந்து தற்போது வெறும் 2 வாரங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனாலெனா பேர்பாக் தெரிவிக்கையில், “தேசிய விசாக்களுக்கான உலகின் மிகப்பாரிய விசா அலுவலகமாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை உள்ளது. இங்கே திறமையான தொழிலாளர்கள் மிகவும் அவசரமாக தேவை” என்று கூறியுள்ளார்.

இந்தியர்கள் மத்தியில் ஜேர்மனி, அதிகமாக பிரபலமாகி வருகிறது. இதில் வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, கல்வி நிலையங்களுக்காகவும் பிரபலமாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், ஜேர்மனியில் சேரும் இந்திய மாணவர்கள் 107% அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய நிபுணர்கள் ஜேர்மனி செல்வதற்கு, தங்கள் தகுதிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் அங்கு வேலைக்கு அழைப்பு பெற்றிருக்க வேண்டும்.

ஜேர்மனி செல்ல, ஒரு வருடம் கால அவகாசம் உள்ள கடவுச்சீட்டு , வேலை ஒப்பந்தம், மற்றும் பொருளாதார ஆதாரங்களைத் தயாரிக்க வேண்டும்.

இந்தியர்கள் ஜேர்மனி செல்வதற்கான செயல்முறைகள் மிகவும் எளிதானவையாக மாறியுள்ளதால், இது இந்திய தொழிநுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...