29 3
உலகம்

உக்ரைனின் கடும் தாக்குதல்: அவசர நிலையை பிரகடனப்படுத்திய ரஷ்யா

Share

உக்ரைனின் கடும் தாக்குதல்: அவசர நிலையை பிரகடனப்படுத்திய ரஷ்யா

உக்ரைன் படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் தினசரி எறிகணை தாக்குதல்கள் நடப்பதால் நிலைமை மிகவும் கடினமானது என்றும் வீடுகள் அழிக்கப்படுகின்றன, பொதுமக்கள் இறக்கின்றனர் மற்றும் காயமடைகின்றனர் என்றும் பெல்கோரோட்டின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த வாரம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் எல்லை தாண்டிய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அங்கு அவசரகால நிலையை அறிவித்தார்.

2022 இல் மொஸ்கோ அதன் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்குள், உக்ரைன் படைகள் ஆழமான ஊடுருவலின் கீழ் எல்லைக்குள் மேலும் முன்னேறிவிட்டதாக உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இராணுவத் தலைவர் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, ரஷ்யாவின் “40 சதுர கிலோமீட்டருக்கு மேலான பிரதேசம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ளார்

எனினும் ரஷ்ய நிலப்பரப்பை கைப்பற்றி தக்க வைப்பது தமது நோக்கம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

நியாயமான அமைதியை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா எவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்கிறதோ… அவ்வளவு விரைவில் ரஷ்யாவுக்குள் உக்ரைன் பாதுகாப்புப் படைகள் நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அமைதியான தீர்வுத் திட்டத்திற்குத் திரும்புவதற்கான ரஷ்ய முன்மொழிவுகளை உக்ரைன் நிராகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

எதிரி, தனது மேற்கத்திய எஜமானர்களின் உதவியுடன், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்

உக்ரேனிய முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்யா இதுவரை போராடி வருகிறது, கிட்டத்தட்ட 200,000 ரஷ்யர்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் சில பகுதிகளில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று மொஸ்கோ கூறியுள்ளது

இதேவேளை, 2014 இல் இணைக்கப்பட்ட கிரிமியா உட்பட அனைத்து உக்ரேனிய பிரதேசங்களில் இருந்தும் ரஷ்யப் படைகள் வெளியேறும் வரை உக்ரைன், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஜனாதிபதி செலென்ஸ்கி நீண்ட காலமாகக் கூறி வருகிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...