உலகம்
கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்
கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்
கனடாவில் (Canada) தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் கொண்டுவரவுள்ள புதிய சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவில் விவசாயம், மீன் மற்றும் கடல் உணவு பதப்படுத்தப்படும் துறைகளில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய தொழிலாளர் நெறிமுறையை கனேடிய அரசாங்கம் உருவாக்கவுள்ளது.
இது, கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் நிகழும் மோசடிகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இதன் மூலம் குறித்த துறைகளில் நேர்மையை மேம்படுத்தி தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கவும் முடியும்.
மேலும், தொழிலாளர்கள் குறைவான ஊதியத்தில் 20%ஐ தாண்டக்கூடாது என்ற விதியை கடுமையாக பின்பற்றவும், கட்டணங்களை உயர்த்தவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, வேலை தரும் முதலாளிகளின் தகுதிகள் தீவிரமாக பரிசீலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.