24 669b385e33a1e
உலகம்செய்திகள்

மைக்ரோ சொப்ட் முடக்கம்: மிகப்பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க நிறுவனம்

Share

மைக்ரோ சொப்ட் முடக்கம்: மிகப்பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க நிறுவனம்

மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்ரைக்’ Crowdstrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று மைக்ரோசொப்ட் சர்வர்கள் முற்றாக முடங்கின.

இதனால் தொலைத்தொடர்பு சேவை, போக்குவரத்து சேவைகள், பங்குச் சந்தை மற்றும் வங்கிகள் என்பன பாதிப்படைந்து வழமைக்கு திரும்பின.

இந்நிலையில், மைக்ரோசொப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ளதுடன் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன.

இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனத்திற்கு 9 பில்லியன் டொலர் சந்தை மூல தனத்தை இழந்துள்ளது.

உலகளவில் மைக்ரோ சொப்ட் (Microsoft) நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலக அளவில் வங்கி சேவைகள் மற்றும் விமானங்களை தரையிறங்குவது விமானங்களின் செக்-இன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை (silanka), இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாட்டில் வசித்து வருபவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள்தான் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோ சொப்ட் விண்டோஸ் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திடீரென்று பல்வேறு பயனர்களின் கணினி திரை நீல நிறமாக மாறி, ரீ-ஸ்டார்ட் ஆகி வருகிறது. இப்படியான சிக்கலுக்கு ப்ளூ ஸ்க்ரீன் ஆப் டெத் என்று பெயர்.

மேலும் மைக்ரோ சொப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது.

இந்த பாதிப்புகெல்லாம் காரணம் Crowdstrike அப்டேட் தான் எனக் கூறப்படுகிறது. CrowdStrike என்பது அமெரிக்காவில் உள்ள சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் மைக்ரோ சொப்ட் நிறுவனம் மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் CrowdStrike மென்பொருளின் அப்டேட்தான் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பாதிப்புக்கு காரணம் என டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் கூறுகிறது.

CrowdStrike இன் ஃபால்கன் சென்சார் செயலிழந்து விண்டோஸ் சிஸ்டத்துடன் முரண்பட்டதால் தரமற்ற அப்டேட் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொண்ட நிறுவனம் இந்தச் சிக்கலைத் தீர்க்க எங்கள் பொறியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதற்காக யாரும் சப்போர்ட் டிக்கெட்டை அணுக வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

மேலும் பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் பயனர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த பிரச்சினைக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...