24 664d0cf9cc15c
உலகம்செய்திகள்

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Share

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்

ஈரானில் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் மரணமடைந்தமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஜனாதிபதி ரைசியின் மரணம், அவரது இடத்திற்கான போட்டியை அதிகார மையத்தில் உருவாக்கும் என்றே நிபுணர்கள் தரப்பின் கணிப்பாக உள்ளது.

அப்படி ஒரு நிலை உருவானால், அது நாட்டில் கலவரங்களை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர். ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் உண்மையான மொத்த அதிகாரமும் உச்சத் தலைவரின் வசமே உள்ளது, ஜனாதிபதியிடம் அல்ல.

ஆனால் அதிகார பகிர்வு தொடர்பில் மோதல் ஏற்படும் என்றால், ஈரான் மீண்டும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக பிரித்தானிய வரலாற்றாசிரியர் Anthony Glees தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் தற்போது ஜனாதிபதி பொறுப்பு 68 வயதான Mohammed Mokhber என்பவரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.

இவர் உச்சத் தலைவருக்கு மிக நெருக்கமானவர் என்றே கூறுகின்றனர்.

இன்னொருவர் 55 வயதான Mojtaba Khameini. இவர் உச்சத் தலைவரின் மகன். இவர் ஜனாதிபதியாக தெரிவானால் நாட்டில் பெரும் விவாதங்கள் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...