ஈரான் ஜனாதிபதியின் மரணம்!! அதிர்ச்சி வெளியிட்ட ரணில்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) திடீர் மரணம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட சிலர் பயணித்த உலங்குவானூர்தி திடீர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரைசியின் மரணம் குறித்து சர்வதேசம் அதிர்ச்சியையும், இரங்கல்களையும் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரைசியின் திடீர் மரணம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,
“ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசியின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும், உள்ளது ” என குறிப்பிட்டுள்ளார்.
- Ebrahim Raisi
- ebrahim raisi president
- iran
- iran helicopter accident
- iran helicopter crash
- iran news
- iran president
- iran president death
- iran president ebrahim raisi
- iran president helicopter
- iran president helicopter accident
- iran president helicopter crash
- iran president missing
- irani president
- iranian president helicopter crash
- irans president ebrahim raisi
- President
- president of iran helicopter crash
- President Raisi Dead After Helicopter Crash
- Ranil Wickremesinghe
- sri lanka