இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

Share
24 6643f8ea059b7
Share

இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது.

இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவில் வசித்து வருகின்றார்.

இந்தநிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 ஆசிரியர்களுக்கும் 12,500 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில், தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறையை எதிர்கொள்ள போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சுகி கணேசநந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு பிறந்த வி. வி. சுகி கணேசநந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர் ஆவார்.

மேலும், இவர் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆவார்.

கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் தி வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...