24 663e893cd3caa
உலகம்செய்திகள்

பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு

Share

பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு

பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்புசூரிய குடும்பத்திற்கு (Solar System) அருகில் பூமியை விட இரு மடங்கு பெரிய பூமியை ஒத்த கிரகமொன்றினை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்திற்கு அப்பால், உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் தொடர்பில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், நமது சூரிய குடும்பத்திற்கு அருகிலேயே மற்றொரு பூமியை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கிரகமானது நமது பூமியில் இருந்து சுமார் 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் அடர்ந்த வளிமண்டலத்துடன் இருப்பதாகவும் பூமியை விட 8 மடங்கு எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கிரகத்திற்கு சூப்பர் எர்த் (super Earth) என்றும் 55 கேன்கிரி இ (55 Cancri e) என்றும் பெயர் சூட்டியுள்ள விஞ்ஞானிகள், இது ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு அருகில் மிகவும் ஆபத்தான முறையில் சுற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

நமது பூமி ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகும் நிலையில், விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ள சூப்பர் எர்த் வெறும் 18 மணி நேரத்தில் தனது சுற்றுவட்டப்பாதையை நிறைவு செய்வதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், சூப்பர் எர்த்தின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்ஸைடு அல்லது கார்பன் மோனாக்சைடு நிறைந்ததாக இருக்கலாம் என்றும், நீராவி மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு போன்ற பிற வாயுக்களை கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நமது பூமியைப் போலவே நிரந்தரமாக பகலிரவை கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் மேற்பரப்பில் மக்மா பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும், அதன் கொதிநிலை 4,200 டிகிரி பாரன்ஹீட் என்பதால், இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும், அடர்த்தியான வளிமண்டலத்துடன் கூடிய இந்த கிரகத்தை கண்டுபிடித்திருப்பதன் மூலம், பால்வெளியில் இதுபோன்று பல்வேறு கிரகங்கள் இருப்பதற்கான சாத்தியங்களை ஆராய உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், சூப்பர் எர்த் கிரகத்தை ஆராய்வதன் மூலம், நமது பூமி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களின் ஆரம்ப காலக்கட்டங்களை அறிந்து நுண்ணறிவு பெற உதவும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....