உலகம்
விண்வெளி பயணத்திற்கு தயாராகும் இந்திய வம்சாவளி பெண்
நாசாவின்(NASA) விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) தனது 3 ஆவது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவர் விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன்(Butch Wilmore) யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41இல் இருந்து மே 6ஆம் திகதி இரவு 10:34 மணிக்கு ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வினை மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக இந்த விண்வெளி பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த பெண் என்ற பெருமையை கொண்ட வீராங்கனை சுனிதா 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.