உலகம்
இந்தியா – பங்களாதேஷ் பேருந்து விபத்துக்களில் 19 பேர் பலி
இந்தியா – பங்களாதேஷ் பேருந்து விபத்துக்களில் 19 பேர் பலி
பங்களாதேஷ் – பரத்பூர் (Bangladesh – Bharatpur)பகுதியில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரத்பூர் – தாக்கா-குல்னா நெடுஞ்சாலையில் இன்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பங்களாதேஷ் அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பங்களாதேஷ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும். இந்தியாவின் ஒடிசா(Odisha, India) மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெய்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையின் பாரபதி பாலத்தில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒடிசாவில் இருந்து கொல்கத்தா நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.