உலகம்
இன்னும் சில வாரங்களில்… ருவாண்டா நாடு கடத்தல்
இன்னும் சில வாரங்களில்… ருவாண்டா நாடு கடத்தல்
சட்ட விரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் இன்னும் சில வாரங்களில் புறப்படும் என சுகாதார செயலர் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சுகாதார செயலர் Victoria Atkins தெரிவிக்கையில், உள்விவகாரத்துறை தொடர்புடைய திட்டத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கிகாலிக்கு ஏற்றிச் செல்லும் விமான நிறுவனம் தொடர்பில் அவர் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார்.
மிக விரைவில் விமானம் புறப்படும் என்றே இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அவரும் எந்த விமான நிறுவனம் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தவில்லை.
சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அது நடக்கும் என்பதற்கான திட்டங்கள் தங்களிடம் உள்ளது என்றார் விக்டோரியா அட்கின்ஸ்.
விமான நிறுவனம் குறித்து உள்விவகார அமைச்சரகம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மிக விரைவில் இந்த திட்டம் செயலுக்கு வரும் என்றார். இதனிடையே ருவாண்டா நாட்டின் சொந்த விமான சேவையும், இந்த திட்டத்தில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.