உலகம்
மூன்றாம் உலகப் போர் தொடர்பில் நாஸ்டர்டாம்சின் கணிப்பு
மூன்றாம் உலகப் போர் தொடர்பில் நாஸ்டர்டாம்சின் கணிப்பு
மூன்றாம் உலகப்போர் தொடர்பாக பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாம் (Nosterdam) கணிப்புகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மூன்றாம் உலகப் போர் குறித்த அவரது கணிப்பு பரவி வருகிறது.
உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்த வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ் (Nosterdam) எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான (Les Prophéties – Wikipedia) என்பதில் கவிதைகளாக எழுதி உள்ளார்.
விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட நாஸ்டர்டாமஸ் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று எழுதி வைத்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூளும் பட்சத்தில் அது மூன்றாவது உலக போராக வெடிக்கும் என்றும் அச்சம் எழுந்துள்ள நிலையில் இவரது கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
“சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால், பெருங்கடலை பயத்திற்கு உள்ளாக்குவார்” என்று நாஸ்டர்டாமஸ் கூறி உள்ளார் .
“சிவப்பு எதிரி” என்று நாஸ்ட்ராடாமஸ் சீனாவையும் நாட்டின் சிவப்புக் கொடியை குறிப்பிடுவதாக சிலர் கூறினாலும் தற்போது செங்கடலில் நிலவும் பதற்றத்துடன் ஒப்பிட்டு சிலர் கூறி வருகிறார்கள்.
இஸ்ரேலை நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இது மிகுந்த கவலைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் மக்களை இஸ்ரேல் மற்றும் ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கனவே அங்கு இருப்பவர்களிடம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அதுதான் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். மேலும் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து ஆலோசனை நடத்த ஐ.நா சபை அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த தாக்குதலானது பதட்டங்களைத் தூண்டி, பிராந்தியத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே பிரதமர் ரிஷி சுனக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் குழப்பத்தை விதைக்கும் நோக்கத்தில் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த இக்கட்டான கட்டத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்றும், அத்துடன் ஜோர்தான் மற்றும் ஈராக் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், நட்பு நாடுகளுடன் சேர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்தவும், மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் பிரித்தானியா அவசர நடவடிக்கை முன்னெடுக்கும் என்றும் ரிஷி சுனக் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.