24 661cdf699b27c
உலகம்செய்திகள்

ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் : வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகள்

Share

ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் : வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தகூடாது எனவும் இதனை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பை உறுதிப்படுத்த” இஸ்ரேலின் பக்கம் பிரான்ஸ் நிற்கும் எனவும் இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கலந்துரையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனும் இஸ்ரேலை பதிலடி கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் காசாவில் போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முழு உரிமையும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருந்தாலும் அவ்வாறு செய்தால் மத்தியகிழக்கில் மேலும் முரண்பாடு அதிகரிக்கும் என டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...