இங்கிலாந்தில் சீரற்ற வானிலை : விமான சேவைகள் இரத்து
இங்கிலாந்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“கத்லீன்” (Kathleen) புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்புகளின் பிரகாரம் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இங்கிலாந்தில் சுமார் 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்தில் தொடருந்து மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Comments are closed.