tamilni 260 scaled
உலகம்செய்திகள்

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா?

Share

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா?

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது.

இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்த பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது.

சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்த கடல் நிலத்தை பலர் ஆக்கிரமித்தனர்.

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, ராய் பேட்ஸ் என்ற நபர் தன்னை சீலாந்தின் இளவரசராக அறிவித்தார். ராய் பேட்ஸ் இறந்ததிலிருந்து, அவரது மகன் மைக்கேல் ஆட்சி செய்து வருகிறார்.

ராய் பேட்ஸ் சீலாந்திற்கான தனியான தபால் தலைகள், பாஸ்போர்ட்கள் மற்றும் பணத்தை அறிவித்தார். நாணயத்தில் ராய் பேட்ஸின் மனைவி ஜான் பேட்ஸின் படம் உள்ளது.

இந்த நாட்டிற்கும் சொந்தமான கொடி உள்ளது, அதில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் உள்ளன.

இந்த சிறிய நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் நன்கொடைகளை நம்பியே உள்ளது.

எனினும், தற்போது மக்கள் சுற்றுலாவுக்காக சீலாந்துக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அந்த நாட்டுக்கான வருமானம் அதிகரித்திருக்க கூடுமென நம்பப்படுகிறது.

இணைய புள்ளி விபரங்களுக்கமை, சீலாந்தில் 27 பேர் மாத்திரமே உள்ளனர்.

சீலாந்தை தனி நாடாக அந்த நாட்டு இளவரசர் அறிவித்தாலும், சர்வதேச ரீதியில் குறித்த நாடு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த காரணத்திற்காக, உலகின் மிகச்சிறிய நாடாக தற்போது வாடிகன் நகரம் பதிவாகியுள்ளதுடன், வாடிகன் நகரம் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 800 பேர் மாத்திரம் உள்ளமை குறிப்பிடதத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...