tamilni 238 scaled
உலகம்செய்திகள்

மகளை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி

Share

மகளை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari) முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் முதல் பெண்மணி பதவியை அவரது 31 வயது மகள் அசீபா பூட்டோவுக்கு (Aseefa Bhutto Zardari) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

முதல் பெண்மணி என்ற பட்டம் பொதுவாக நாட்டின் அதிபரின் மனைவிக்கு தான் செல்லும். ஆனால், சர்தாரியின் மனைவி உயிருடன் இல்லை.

அவரது மனைவியும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) 2007ல் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தனியாகவே வாழ்ந்தார்.

2008-2013க்கு இடையில், அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் முதல் பெண்மணி பதவி காலியாகவே இருந்தது.

ஆனால் இம்முறை சர்தாரி தனது இளைய மகள் ஆசிஃபா பூட்டோவை முதல் பெண்மணியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் பின்னணியில், ஜனாதிபதியின் மூத்த மகள் பக்தவார் பூட்டோ சர்தாரி, ஆசிஃபாவை முதல் பெண்மணியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

பாகிஸ்தானின் முதல் பெண்மணி ஆசிஃபா, நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சட்டப் போராட்டம் முதல் ஜனாதிபதி பதவியேற்பு வரை அனைத்து நேரங்களிலும் சர்தாரிக்கு ஆதரவாக நின்றதாக அவர் கூறினார்.

இந்தப் பதிவின் மூலம் பாகிஸ்தான் முதல் பெண்மணி அந்தஸ்தை ஆசிப் ஏற்பார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

பாகிஸ்தானின் 14வது ஜனாதிபதியாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி பதவியேற்றுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சர்தாரி வெற்றி பெற்றார். அவர் PPP மற்றும் PML-N ஆதரவுடன் போட்டியிட்டு சன்னி இத்தேஹாத் கவுன்சில் வேட்பாளர் மஹ்மூத் கான் அச்சக்சாயை தோற்கடித்தார்.

இந்தத் தேர்தலில் சர்தாரி 255 வாக்குகளும், மஹ்மூத் 119 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் பாகிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக சர்தாரி பதவியேற்றார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...