உலகம்
திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்
திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் மாதவன் (55). மண்டபம் ஒன்றின் உரிமையாளரான இவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், மாதவனின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
எதிர்பாராத தாக்குதலால் மாதவனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மாதவன் தனது மனைவி, மகள் மற்றும் மாமியார் மீது தாக்குதல் நடந்ததைத் தடுத்துள்ளார்.
அப்போது அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் ஏற்பட்டதால் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து தாக்குதல்தாரி தப்பியோடிய நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாக்கப்பட்ட மாதவனின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் மூவரில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாதவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதல்தாரியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.