இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்ஸு மன்னிப்பு கேட்க வேண்டும்: மாலத்தீவு எதிர்கட்சி தலைவர்
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்திய பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.
இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் சிலர் இதனை எதிர்த்து விமர்சித்தனர், இது இந்தியா-மாலத்தீவு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு “இந்தியாவை வெளியேற்றுவோம்(india out) என்ற முழக்கத்தை முன் வைத்து தேர்தலில் வெற்றி பெற்று இருந்தார்.
அத்தோடு ஆட்சிக்கு வந்ததும் அதிபர் முகமது முய்ஸு, இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15ம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற வேண்டும் அரசு கெடுவையும் விதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி அதிபர் முகமது முய்ஸு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர உள்ளனர்.
இந்நிலையில் மாலத்தீவின் மற்றொரு எதிர்கட்சியான மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம் இந்திய பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
அத்துடன் எந்தவொரு நாட்டை பற்றியும், குறிப்பாக அண்டை நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் வகையிலும் நாம் பேசக்கூடாது.
அதேசமயம் நமது நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்கட்சியான மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம் குறிப்பிட்டிருக்கிறார்.