தென் கொரிய கடற்பகுதியில் சரமாரியாக ஏவுணை தாக்குதல் நடத்திய வடகொரியா!
வடகொரியா மேற்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை தென்கொரிய கடற்பகுதியில் ஏவியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தென் கொரியா நாடானது ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது.
ஆனால் கிம் ஜாங் உன் இதனை படையெடுப்பிற்கான ஒத்திகை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் தங்கள் கடற்பகுதியில் வடகொரியா பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சியோலின் ஒருங்கிணைந்த தலைமை அதிகாரிகள் புதன்கிழமை காலை இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை மஞ்சள் கடலை நோக்கி வடகொரியாவால் ஏவப்பட்ட பல கப்பல் ஏவுகணைகளை எங்கள் இராணுவம் கண்டறிந்துள்ளது.
விரிவான விவரக்குறிப்புகள் தென்கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் நெருக்கமாக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.