tamilni 248 scaled
உலகம்செய்திகள்

அதிர்ச்சியை ஏற்படுத்தும் புடின் வகுத்துள்ள கொடூர திட்டம்

Share

கசிந்த இராணுவ ஆவணங்களின்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்திவிடுவார் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிக்கியுள்ள இந்த ஆவணங்களை பிரபல பத்திரிகை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

அதன்படி எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி 2025ல் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியத்தை புடின் உருவாக்குவார் என்றும் அப்போது அரை மில்லியன் நேட்டோ மற்றும் ரஷ்ய வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள் என்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த குளிர்காலத்தில் நேட்டோ மீது இருமுனைத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும் அடுத்த கோடைகாலத்தில் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 200,000 வீரர்களை திரட்ட புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் உக்ரைன் மீது வலுவான தாக்குதலை முன்னெடுத்து, ஜூன் மாதம் வெற்றியை பதிவு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கத்திய நாடுகள் மீதான தாக்குதலை புடின் முன்னெடுக்க உள்ளார். இதனிடையே, நேட்டோவின் கிழக்குப் பகுதியில் துருப்புக்கள் மற்றும் ஏவுகணைகளை கட்டமைக்க புடின் திட்டமிடலாம் என்றும், மேற்கு நாடுகளை பகைத்து பால்டிக் நாடுகளை சீர்குலைக்க புடின் முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், நேட்டோ பகுதிக்கும் ரஷ்ய பிராந்தியத்திற்கும் நடுவே உள்ள 60 மைல்கள் நிலப்பரப்பை கைப்பற்ற இரகசிய திட்டங்களையும் புடின் வகுத்து வருவதாக ஜேர்மனியின் இராணுவ உளவுத்துறை நம்புகிறது. அப்படியாக நடவடிக்கை மேற்கத்திய நாடுகளுக்கும் ம்ரஷ்யாவுக்கும் இடையே போர் வெடிக்க வாய்ப்பாக அமையும் என்றே கூறப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில் 200,000 வீரர்களை திரட்டி ராணுவத்தை வலுப்படுத்த புடின் முடிவு செய்துள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது எதிர்பார்க்க முடியாத தாக்குதலை முன்னெடுப்பார் என்றும், அதில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவிருந்தும் உக்ரைன் சமாளிக்க முடிமால் திணறும் என்றும், இறுதியில் ஜூன் மாதம் புடின் வெற்றியை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜூலை மாதம் மேற்கு நாடுகள் மீது சைபர் தாக்குதல் தொடங்கி பல முனை தாக்குதலை புடின் முன்னெடுக்க இருக்கிறார்.

செப்டம்பர் மாதம் பெலாரஸ் நாட்டில் இன்னொரு படையெடுப்புக்கான தயாரிப்புகளை புடின் முன்னெடுக்க உள்ளார். தற்போது 50,000 ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் நாட்டில் பயிற்சியில் உள்ளனர்.

அக்டோபர் மாதம் நேட்டோ நாடுகளுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் Suwalki Gap பகுதியை கைப்பற்ற ரஷ்ய படைகள் களமிறங்கும். டிசம்பர் மாதம் திட்டமிட்டே நேட்டோ நாடுகளின் சிறிய தொகுப்பை சீர்குலைப்பதற்காக பால்டிக் நாடுகளில் கொடிய கலவரங்கள் தூண்டப்படும்.

இச்சம்பவத்தின் போது அமெரிக்காவில் தேர்தல் முடிந்து சில வாரங்கள் ஜனாதிபதி பொறுப்பில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...