உலகம்செய்திகள்

கின்னஸ் சாதனையை இழக்கும் புர்ஜ் கலிஃபா

Share
tamilni 109 scaled
Share

உலகின் மிக உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள டுபாயின் புர்ஜ் கலிஃபா அந்த சாதனையை இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிஃபா இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கவுள்ளது.

சவுதியில் கட்டப்பட்டு வரும் ‛‛ஜெட்டா டவர்” கட்டடம் உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற சாதனையை படைக்கவுள்ளது.

டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, 828 மீற்றர் உயரமுடைய இக்கட்டடத்தின் கட்டுமான பணிகள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது.

உலகின் தலைசிறந்த நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிஃபாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிஃபா, இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கவுள்ளது.

அதாவது, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது நிர்மானிக்கப்பட்டு வரும் கிங்டம் டவர் கட்டடம் முழுமையடைந்தவுடன், புர்ஜ் கலிஃபா கட்டடத்தை விட உயரமானதாக அமையவுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள இதன் உயரம் 1,000 மீட்டருக்கும் மேல் இருக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டடம் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...