உலகம்
ரூ.279 கொடுத்து பிரியாணி சாப்பிட்டவருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு
ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு ஹொட்டல் நிர்வாகம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்துள்ளது.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், திருப்பதியில் ரோபோ என்ற தனியார் ஹொட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹொட்டல் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அப்போது பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, ரூ. 279 கொடுத்து பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.
இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளிப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று புத்தாண்டு அன்று ஹொட்டல் நிர்வாகி பாரத் குமார் மற்றும் அவரது மனைவி நீலிமா ஆகியோர் அந்த நபரை தேர்வு செய்தனர்.
அப்போது, திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ஹொட்டல் நிர்வாகிகள் கூறும் போது, பிரியாணிக்கு கார் பரிசாக வழங்கும் புதுமையான திட்டத்தால் எங்களது ஹொட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினர்.