உலகம்செய்திகள்

ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

tamilni 162 scaled
Share

ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட இருந்த நிலையில் ஹமாஸ் விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து போர் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.

இந்நிலையில் ஹமாஸின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் ஆயுதப் படையின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேடா(Abu Obeida) தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவிக்கையில்,

பிணைக் கைதிகள் பரிமாற்றம், பேச்சுவார்த்தை மற்றும் எதிர்ப்பாளர் கோரிக்கை ஆகியவை நிறைவேற்றப்படாமல், பாசிச எதிரி மற்றும் அதன் தலைமை அத்துடன் அதன் ஆதரவாளர்கள் யாரும் பிணைக் கைதிகளை உயிருடன் வெளியேற்றி கொண்டு செல்ல முடியாது.

இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதை தவிர வேறு வழியில்லை.

நம்முடைய எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே எதிரிகள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர்.

தங்களுடைய நிலத்திற்காக போர் நடைபெற்று வருகிறது.

போர் நிறுத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மத்தியஸ்த நாடான கட்டார் வழங்கிய தகவலில், போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனினும் இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு தாக்குதல் பேச்சுவார்த்தைக்கான சாளரத்தை குறைத்து வருகிறது.” என்றார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...