உலகம்
பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ
பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ
தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீர் பாய்ச்சி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன கடல் பகுதியில் உள்ள மணல்திட்டு ஒன்றை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மணல்திட்டுக்கு அருகில் நின்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு ஒன்றை சீன கடற்படையும், சீன ஆயுதக் குழுவின் படகும் இணைந்து தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா தன்னுடைய அதிகாரம் முழுவதையும் தென் சீன கடல் பகுதியில் நிலைநாட்ட முயன்று வருகிறது.
அதே சமயம் சர்வதேச கடல் வழித்தட உரிமையை சீனா பறிப்பதாகவும் அமெரிக்கா கருதி வருகிறது.
மீன்பிடி படகு மீது சீன கப்பல்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.