ஹிஸ்புல்லா மூத்த தலைவரின் மகன் பலி
சிரியா எல்லை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியா எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் ஹசன் அலி டக்டோக் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தாக்குதலில் பலியான ஹசன் அலி, தெற்கு சிரியாவில் ஹிஸ்புல்லா குழுவின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பதாகக் கூறப்படும் அலி முசா டக்டோக்கின் மகன் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமான போர் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போரானது இஸ்ரேல் மீது ஹாமஸ் நடத்திய தாக்குதலில் ஆரம்பமனது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல், ஹமாஸ் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தரைவழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.