உலகம்செய்திகள்

எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

rtjy 72 scaled
Share

எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக பெடரல் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

முதலில் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.

மேலும், நவம்பரில் எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்த நிலையில் நவம்பர் மாதம் 13ஆம் திகதி ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனிக்குள் நுழையும் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஆஸ்திரியாவின் எல்லையில் ஜேர்மனி 2015 முதல் எல்லை சோதனைகளை மேற்கொண்டதோடு அக்டோபரில் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 9,200 அங்கீகரிக்கப்படாத உள்ளீடுகள் கண்டறியப்பட்டதாகவும் மேலும் 4,370 தடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...