2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் புடின்!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் மேல் சபை கூட்டமைப்பு கவுன்சில் அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் திகதியை ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியாக அங்கீகரித்துள்ளது.
ரஷ்யாவின் புதிய ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வாக்களிப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் விளாடிமிர் புடின் (Vladimir Putin) போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.