ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: உரிமை கோரிய ஹமாஸ்
ஜெருசலேம் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஹமாஸ் தரப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஹமாஸ் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். அதேநேரம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவிவிக்கப்படுகிறது.