இளவரசர் வில்லியம் மனதை கேட் கொள்ளையடித்த அந்த தருணம்: மீண்டும் பிரபலமாகும் காட்சி
பிரித்தானிய இளவரசர் வில்லியம், தொண்டு நிறுவன ஃபேஷன் ஷோ ஒன்றிற்கு சென்றிருந்தபோது, கவர்ச்சி உடையில் பூனைநடை பயின்ற ஒரு பெண் அவரது கண்ணில் பட்டார்.
2001ஆம் ஆண்டு, இளவரசர் வில்லியம் புனித ஆண்ட்ரூ பல்கலையில் பயின்றுகொண்டிருந்த நேரத்தில், அவர் தங்கியிருந்த அறைக்கு சற்று தள்ளியிருந்த அறை ஒன்றில்தான் கேட் தங்கியிருந்திருக்கிறார்.
இருவரும் அறிமுகமானாலும், 2002ஆம் ஆண்டு கேட் ஃபேஷன் ஷோ ஒன்றில் கண்ணைக் கவரும் வகையில், உள்ளாடைகள் தெரிய, மெல்லிய உடை ஒன்றை அணிந்து, கேட் பூனை நடை பயின்று வர, அப்போதுதான் இளவரசர் வில்லியம் மனதை அவர் கொள்ளையடித்திருக்கிறார்.
அதுவரை இருந்த நட்பு அன்று காதலாக, இன்று அவரது மனைவியாகி அவரது பிள்ளைகளுக்கும் தாயாகியிருக்கிறார் கேட்.
பிரித்தானிய தொலைக்காட்சிகள், ராஜ குடும்பத்தின் கதையை தொலைக்காட்சித் தொடராக எடுப்பது வழக்கம்.
அவ்வகையில், தொலைக்காட்சி ஒன்று இளவரசர் வில்லியம் கதையை தற்போது பதிவு செய்துவருகிறது.
அதில், அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, கவர்ச்சி உடையில் இளவரசர் வில்லியம் மனதை கேட் கொள்ளையடிக்கும் காட்சி வெளியாகின்றது.
மக்கள் அந்தக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பத்திரிகைகள் முழுவதும், இளவரசி கேட் கவர்ச்சியாக நடைபயிலும் காட்சிகளால் நிறைந்திருக்கின்றன!