உலகம்
வங்கக்கடலில் உருவாகும் ”மிக்ஜாம் புயல்”: எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்
வங்கக்கடலில் உருவாகும் ”மிக்ஜாம் புயல்”: எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்
வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்காள விரிகுடாவில் மற்றொரு சூறாவளி புயல் உருவாக உள்ளது. இது இந்த வருடத்தில் நான்காவது புயலாக உள்ளது.
மேலும் இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை தாக்க வாய்ப்புள்ளதாகவும் ஸ்கைமெட்வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 29ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் டிசம்பர் 1ஆம் திகதி புயலாக வலுப்பெறக்கூடும்.
புயலானது டிசம்பர் 5ஆம் திகதி கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று மியான்மர் நாடு பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.