இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்!
இழுபறிகள், தாமதங்கள் இருந்தாலும் யுத்த நிறுத்தம் ஒன்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்.
குறிப்பாக சொல்லப்போனால் இன்று ஆரம்பிக்கவிருந்த தற்காலிக யுத்த நிறுத்தம் தாமதமாவதற்கு காரணம் ஹமாஸ் காசாவிலுள்ள ஆயுத குழுக்ளே தவிர இஸ்ரேல் அல்ல.
காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பை தவிர அங்கு செயற்பட்டு வருகின்ற சில ஆயுத குழுக்களும் இஸ்ரேலில் இருந்து 50இற்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை கடத்தி சென்று வைத்திருப்பதாகவும் அவர்கள் வசமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதிலுள்ள சிக்கல்கள் காரணமாகவே இஸ்ரேல்- ஹமாஸ் யுத்த நிறுத்தம் தாமதமாவதாக கூறப்படுகிறது.