உலகம்
இந்தியா நோக்கி புறப்பட்ட இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு


இந்தியா நோக்கி புறப்பட்ட இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு
ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் செங்கடலில் இஸ்ரேலிய சரக்கு கப்பலைக் கைப்பற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கப்பல் தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் நீடித்து வரும் நிலையில், செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைப்போம் என்று ஹவுதி போராளிகள் குழு மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த நிலையில் ஹவுதி போராளிகள் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், நாங்கள் இஸ்ரேலிய சரக்குக் கப்பலை ஏமன் கடற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், ஹவுதி போராளிகள் கைப்பற்றியது சரக்கு கப்பல் என்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அது இஸ்ரேலிய சரக்கு கப்பல் என ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பு முற்றாக மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த கப்பலில் இந்தியர்கள் எவரும் இல்லை என்றும் பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.