உலகம்செய்திகள்

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

Share

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காஸாவில் பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர்காலம் நெருங்கி வருவதால், பாதுகாப்பற்ற மற்றும் நெரிசலான தங்குமிடங்கள் மற்றும் சுத்தமான தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பல வாரங்களாக எச்சரித்து வரும் இந்த ஐ.நா அமைப்பு, ரொட்டி தற்போது பற்றாக்குறையாக இருப்பதாகவும் அல்லது இல்லாது போன்ற நிலை இருப்பதாகவும், எஞ்சிய உணவால் தற்போதைய பசி தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு பாதுகாப்பான வழித்தடம் உருவாக்குவதால் மட்டுமே காஸா மக்களின் உணவு பற்றாக்குறையை போக்க முடியும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை எகிப்தில் இருந்து வந்த டிரக்குகள் போதிய எரிபொருள் இல்லாததால் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போனதாகவும், எரிபொருள் பற்றாக்குறையும் உணவு விநியோகத்திற்கு தடையாக இருப்பதாக ஐ.நா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...