tamilni 178 scaled
உலகம்செய்திகள்

டிக் டொக் செயலிக்கு தடை

Share

டிக் டொக் செயலிக்கு தடை

நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டொக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், நேபாளத்தில் தனது ஆதிக்கங்களை அதிகரிக்க சீனா தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.

சீனாவிற்கு எதிராக நேபாள அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் டிக்டொக்கில் 1,629 சைபர் குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தின் பல மத மற்றும் கலாச்சார இடங்களில் டிக்டொக் காணொளிகளை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பே இந்தியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக்கை தடை செய்துள்ளன. தெற்காசியாவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக டிக்டொக்கை தடை செய்யும் மூன்றாவது நாடாக நேபாளம் மாறியுள்ளது.

இந்தியா 2021 ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தானில் 2022 ஆம் ஆண்டிலும் டிக்டொக்கை தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...