tamilni 173 scaled
உலகம்செய்திகள்

காஸாவின் பாராளுமன்றத்தை கைப்பற்றிய இஸ்ரேல்? வெளியான புகைப்படம்

Share

காஸாவின் பாராளுமன்றத்தை கைப்பற்றிய இஸ்ரேல்? வெளியான புகைப்படம்

ஹமாஸ் சுரங்கப்பாதையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகளை விடுப்பதற்காக, அவர்களது தோழர்கள் காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தில் துப்பாக்கியுடன் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று இரவு இஸ்ரேல் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீன சட்டசபை கட்டிடத்தில் உள்ள அறை ஒன்றில், துப்பாக்கிகள் மற்றும் கொடிகளுடன் இஸ்ரேலிய துருப்புகள் நிற்கும் புகைப்படம் வெளியாகி அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால், இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை இன்னும் நிறுவப்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

நேற்று இரவு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஹமாஸ் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்றும், IDF ஒவ்வொரு புள்ளியிலும் முன்னேறி வருகிறது என்றும் கூறினார்.

அதேபோல் இஸ்ரேலிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ள காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் நியோ-நேட்டல் பிரிவில் இப்போது ஏழு குழந்தைகள் இறந்துவிட்டதாக நேற்று கூறப்பட்டது.

Share
தொடர்புடையது
25 692cda477c3f7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு நாயாறு பாலம் மீட்பு: இராணுவ பொறியாளர்களின் துரித நடவடிக்கையால் மீண்டும் போக்குவரத்து சீர்!

‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் முற்றாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு – நாயாறு...

25 6906f59203ad8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது; பெல்லன்வில பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

தெஹிவளை, குவார்ட்ஸ் (Quartz) விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்...

marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...