rtjy 142 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளர்: விசா இரத்து

Share

எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் விசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் காசா மீதான தாக்குதலையும், இஸ்ரேல் – ஹமாஸ் போரையும் நிறுத்த வேண்டும் என பதாகைகளை ஏந்தி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பேரணிக்கு எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மொடாஸ் மாதார் (Moataz Matar) ஆதரவு தெரிவித்த நிலையிலேயே அவருடைய வீசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளது.

மேலும் ஒரு நிகழ்ச்சியில் இவர் இஸ்ரேல் மீதான ஹமாஸின் முதல் தாக்குதலை வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என்று விவரித்திருந்தமை இஸ்ரேலிய ஆதரவாளர்களால் கண்டனத்தையும் பெற்றியிருந்தது.

முன்னதாக, இஸ்ரேலை ஹமாஸ் தாக்கிய சிறிது நேரத்திலேயே யூத-விரோத நடத்தை என்று குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உள்துறை குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் யூத-விரோத நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், உள்துறை அலுவலகத்தால் அவர்களது விசாவை இரத்து செய்யக்கூடிய குறைந்தபட்சம் 6 வெளிநாட்டவர்களின் ஒருவராக மொடாஸ் உள்ளார் என குறித்த ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஜென்ரிக் இதுகுறித்து ஊடகத்திடம் கூறுகையில், ”விசாவின் சிறப்புரிமையை பிழையான முறையில் பயன்படுத்தி செய்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயல்களை அங்கீகரிக்கும், வகையில் பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் வழங்கப்படமாட்டாது” என தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சால் விசா இரத்து செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவராக மொடாஸ் கருதப்படுகிறார்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...