3 1 2 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

Share

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

காஸா பகுதியில் அமைதி திரும்ப ஒரே வழி இது தான் என சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரேபிய உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய தலைநகரில் அரேபிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஆகியோர் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில், காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் – ஹமாஸ் போரானது எஞ்சிய மத்திய கிழக்கு நாடுகளிலும் வியாபிக்கலாம் என்ற அச்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த அதிரடி தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளதுடன், தற்காப்பு என அறிவித்து, இதுவரை முன்னெடுத்த கொடூர தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 11,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே சவுதி அரேபியா முக்கியமான உச்சிமாநாடு ஒன்றை முன்னெடுத்தது. இதில் முதல் முறையாக அரேபிய தலைவர்களும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக ஒரே மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து குற்றச் செயல்களுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காஸா பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதுதான் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் முதல் முறையாக வருகை தந்துள்ள ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் ஒருமனதாக அந்த நாட்டின் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலும் அதன் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும் இதுவரை போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளதற்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய தலைவர்களால் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...