உலகம்செய்திகள்

போருக்கு தயாராகவே உள்ளோம்… இஸ்ரேலுக்கு எதிராக சீறிய ஹிஸ்புல்லா தலைவர்

Share
1 1 scaled
Share

போருக்கு தயாராகவே உள்ளோம்… இஸ்ரேலுக்கு எதிராக சீறிய ஹிஸ்புல்லா தலைவர்

லெபனானின் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா கட்சியின் ஆயுதப் பிரிவு புதிய வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், இஸ்ரேலில் புதிய இலக்குகளைத் தாக்கியதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக போருக்கும் தயாராகவே இருப்பதாக அவர் உறுதி செய்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர், இந்த விவகாரம் தொடர்பில் இது இரண்டாவது முறையாக Sayyed Hassan Nasrallah தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

லெபனான் எல்லையில் முன்னெடுக்கப்படும் சண்டை ஒரு முழுமையான போராக மாறும் வாய்ப்பு இருப்பதாக அவர் முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை பேசிய அவர், ஹிஸ்புல்லா அமைப்பு சாமர்த்தியமாக செயல்பட்டு எதிரியின் பல எண்ணிக்கையிலான இலக்குகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலூக்கு எதிராக போருக்கு தயார் நிலையிலேயே இருப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக லெபனானை போருக்கு தூண்டும் வேலையை ஹிஸ்புல்லா முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஹிஸ்புல்லா தொடர்ந்து தவறிழைத்து வருவதாகவும், காஸாவில் முன்னெடுக்கும் தாக்குதலை லெபனானிலும் நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

1982ல் ஈரானின் புரட்சிப்படை தலைவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஹிஸ்புல்லா அமைப்பு. இந்த அமைப்பு 2006ல் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு மாத காலம் நீண்ட போர் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது.

இக்குழுவினர் லெபனான்-இஸ்ரேல் எல்லையில் அக்டோபர் 8 முதல் இஸ்ரேலியப் படைகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். மட்டுமின்றி, ஹிஸ்புல்லா பெரும்பாலும் இஸ்ரேல் இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.

இஸ்ரேல் பதிலடிக்கு இதுவரையில் 70 வீரர்களை ஹிஸ்புல்லா இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...