உலகம்
காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்திய ரஷ்யருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி புடின்
காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்திய ரஷ்யருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி புடின்
உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, கொடூர குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
மூன்றரை மணி நேரம் சித்திரவதை
தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றதற்காக விதிக்கப்பட்ட 17 வருட சிறைத்தண்டனையை விளாடிஸ்லாவ் கன்யூஸ் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அனுபவித்துள்ளார்.
காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் கன்யூஸ் தனது முன்னாள் காதலியை சீரழித்து, 111 முறை கத்தியால் குத்தி மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார். பின்னர் அவர் ஒரு கேபிள் இரும்பினால் குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து, இறுதியில் அவளைக் கொன்றுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 7 முறை பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஆணை மூலம் நீக்கப்பட்டது
கன்யூஸ் ரஷ்ய ராணுவ வீரர் என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கன்யூஸ் விடுவிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து, கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்
இதனிடையே, உக்ரைன் எல்லைக்கு கன்யூஸ் மாற்றப்படும் தகவலை சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கன்யூஸ் மன்னிக்கப்பட்டார் எனவும், அவரது தண்டனை ஏப்ரல் 27 அன்று ஜனாதிபதி ஆணை மூலம் நீக்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.