உலகம்
4 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல்! வெள்ளை மாளிகை அறிவிப்பு
ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கான போரில், நான்கு மணிநேர இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தினசரி இடைநிறுத்தங்களை நிறுவுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களில், தினசரி நான்கு மணிநேர மனிதாபிமான இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்ரேல் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு இடைநிறுத்தத்தின் நேரமும் மூன்று மணிநேரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் எனவும், அவை இன்று தொடங்கும் எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தினார்.