உலகம்
நீடிக்கும் நிலநடுக்கங்கள்… கூட்டமாக மக்களை வெளியேற்ற முடிவு செய்த ஐரோப்பிய நாடு
நீடிக்கும் நிலநடுக்கங்கள்… கூட்டமாக மக்களை வெளியேற்ற முடிவு செய்த ஐரோப்பிய நாடு
சூப்பர் எரிமலையைச் சுற்றி நிலநடுக்கங்கள் தொடர்கின்ற நிலையில் மக்களை கூட்டமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துகளை வெளியேற்றும்
செப்டம்பர் முதல் இதுவரை 2,500 நிலநடுக்கங்களை சூப்பர் எரிமலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அமெரிக்க புவியியல் சங்கத்தின் கூற்றுப்படி, ஒரு சூப்பர் எரிமலை என்பது எரிமலை வெடிப்பு குறியீட்டில் 8 அளவு வெடித்த எரிமலை மையம் என வரையறுக்கப்படுகிறது.
அதாவது இது 1,000 கன கிலோமீட்டருக்கும் அதிகமான துகளை வெளியேற்றும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், நேபிள்ஸுக்கு வெளியே உள்ள Pozzuoli நகரில் வசிப்பவர்கள், சமீபத்திய தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கவலையடைந்துள்ளனர்.
அவர்கள் காம்பி ஃப்ளெக்ரேயின் எரிமலைப் பகுதியில் வசிப்பதாலையே இந்த சிக்கல். 80-சதுர மைல் தாழ்வான பகுதியில் ஒரு டசின் கூம்பு வடிவ எரிமலைகள், பல ஏரிகள் மற்றும் அரை மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.
மேலும் 80,000 மக்கள் இதன் சுற்றுவட்டாரத்தில் வசித்து வருகின்றனர். Pozzuoli துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதி 1960 களின் பிற்பகுதியிலிருந்து சுமார் 11.5 அடி உயர்ந்துள்ளது, இதில் 2014க்கு பிறகு 3 அடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இத்தாலிய அரசாங்கம் கடந்த மாதம் நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ளதுடன், கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கருதினால், மக்களை மொத்தமாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் அழைப்பு விடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.