உலகம்
இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல்
இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல்
ஜபாலியா அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜபாலியா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 120 பேரை இன்னும் காணவில்லை என்றும், 777 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும், அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு போர்க்குற்றங்களுக்கு சமமாக இதனை கருதுகிறோம் எனவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, காசாவை சேர்ந்த ஆயிரம் குழந்தைகளுக்கு ஐக்கிய அரபு அமீரக வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.