உக்கிரமடையும் காசா போர்க்களம்: பிரதிநிதியை சந்தித்த கனேடிய பிரதமர்
தங்கள் உறவினர்களின் உரிமைகள், பாதுகாப்பது குறித்து கனடாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் கவலையுற்றுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 8,300 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போர் நிறுத்தம் செய்வதற்கான உலகளாவிய கோரிக்கைளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், காசாவில் உள்ள வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்லாமியர் வெறுப்பு மனநிலையை எதிர்த்து போராடுவதற்கான கனடாவின் சிறப்புப் பிரதிநிதி அமிரா எல்காவாபியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அவருடன் உரையாடியது குறித்த புகைப்படத்தை பகிர்ந்த ட்ரூடோ அவரது பதிவில்,
‘கனேடிய முஸ்லீம்கள், அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் தங்கள் உறவினர்கள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறார்கள்.
நான் நேற்று அமிரா எல்காவாபியை சந்தித்தபோது இந்த அச்சங்கள் மற்றும் இஸ்லாமியர் வெறுப்பு மனநிலை மற்றும் அனைத்து வகையான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம்’ என தெரிவித்துள்ளார்.