உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்….! போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா அறிவிப்பு

rtjy 2 scaled
Share

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்….! போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா அறிவிப்பு

உலகளாவிய ரீதியில் இஸ்ரேல்ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது.

இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அறிவித்துள்ளார்.

அத்துடன், மனிதாபிமான உதவிகளை காசா பகுதிக்கு முன்னெடுக்கும் போது தாக்குதலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிர்பி தெரிவித்துள்ளார்.

காசாவின் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் படைகளை ஒடுக்காமல் போர் நிறுத்தம் என்பது இல்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், போர் நிறுத்தம் என்றால் இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திற்கு சரணடைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ள நிலையிலேயே அமெரிக்கா போர் நிறுத்த கோரிக்கை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இஸ்ரேல் நாட்டின் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

போரின் களநிலவரங்களை வெளிக்கொண்டு வருவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தமது ஊடகவியலாளர்களை அனுப்பி வைத்துள்ளன.

இந்நிலையில், போரால் சிக்கி இதுவரை 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக இஸ்ரேல் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 26 பேர் பாலஸ்தீனர்கள் எனவும் 4 பேர் இஸ்ரேல் நாட்டினர் மற்றும் ஒரு லெபனான் ப ஊடகவியலாளரும் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர ஊடகவியலாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளதுடன் 9 பேர் காணாமலோ அல்லது சிறை பிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் குறித்த செய்தி ஊடகம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரின் வீடு முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தபட்டமை தொடர்பில் பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படும் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்-அரூரியின் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது.

எனினும் அவர் தனது வீட்டில் இல்லை என்றும் லெபனானில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018-ல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...