தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் படையினர் அறிவித்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 21 நாளாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் மொத்தமாக இதுவரை 8,540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரு தரப்புகளும் தாக்குதலை முன்னெடுத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பரவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான காணொளி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
இதன்படி ஹமாஸ் படையினரின் இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் 3 முக்கிய காணொளிகளை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த காணொளியில் இஸ்ரேலின் “Iron Dome”(இஸ்ரேலின் சிறப்பு வான் பாதுகாப்பு அமைப்பு) ஹமாஸ் படைகளின் ஏவுகணைகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.