உலகம்செய்திகள்

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்ணை சீரழித்துக் கொன்ற வெளிநாட்டவர்: குற்றச்சாட்டுகள் பதிவு…

Share

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்ணை சீரழித்துக் கொன்ற வெளிநாட்டவர்: குற்றச்சாட்டுகள் பதிவு…

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டவையாம்.

Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.

அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Bohling, 31) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி ஈவா மற்றும் கெல்சியை அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும் ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், தற்போது ட்ராய் மீது ஜேர்மனியில், கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...