3 1 1 scaled
உலகம்செய்திகள்

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

Share

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகி வரும் நிலையில், தற்போது ஈரானின் தரைப்படை இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது.

இந்த நிலையில், காஸா மீதான போர் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், அதை மூன்னெடுத்து நடத்தும் அமெரிக்கா அந்த தீயில் இருந்து தப்ப முடியாது என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.

தற்போது தரைப்படையை தயார் படுத்தும் நோக்கில், இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறக்கப்பட்டுள்ளது. தரைப்படையுடன் 200 ஹெலிகொப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காஸா மீது தரைவழித் தாக்குதலை முன்னெடுத்தால், லெபனான் மற்றும் ஈரான் போரில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.

மேலும், ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குறிப்பிட்டே, தரைப்படையின் பயிற்சியை முன்னெடுத்துள்ளது. ஈரானின் 7 மாகாணங்களில் இருந்தும் துருப்புகளும் தளவாடங்களும் பயிற்சிக்கு என திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய போக்கு கண்மூடித்தனமானது என உணர்ந்து கொண்ட ஜோ பைடன், தற்போது பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...